செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது

Published On 2017-09-10 06:44 GMT   |   Update On 2017-09-10 06:44 GMT
விளைச்சல் அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்து உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த வருடம் பருவ மழை பொய்த்ததால் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வருவது வெகுவாக குறைந்தது. இதனால் அனைத்து காய்கறி விலையும் உயர்ந்தது.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காலகட்டத்தில் பருவ மழை மட்டுமின்றி வெப்பசலனம் காரணமாகவும் பரவலாக அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்து மார்க்கெட்டுக்கு அதிக அளவில் காய்கறிகள் வந்து குவிகிறது.

கடந்த மாதம் வரை காய்கறி விலை 1 கிலோ 40 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. ஆனால் இந்த மாதம் அனைத்து காய்கறிகளின் விலையும் 30 ரூபாய்க்கு கீழே இறங்கிவிட்டது.

Similar News