செய்திகள்
பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
குன்னம்:
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ், விவசாயி. இவரது மகள் சங்கரி (வயது 21). இவர் திருச்சி சிறுகனூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 8-ந்தேதி கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகுவீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து ரெங்கராஜ் பாடாலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சங்கரி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.