null
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட்
- வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விண்வெளிக்கு வீரர்களை அனுப்பவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கிபட்டது.
இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.இந்நிலையில் விண்வெளியில் டிராபிக் ஜாம் ஆகியுள்ளதால் ராக்கெட் 2 நிமிடம் தாமதாக 10.00 மணிக்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.
ஒரே சுற்றுப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களுடன் சிக்கும் [conjunctions] என்பதால் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.
ராக்கெட்டின் சுற்றுப்பாதை மற்றும் பறக்கும் பாதையில் உள்ள நெரிசல் காரணமாக இஸ்ரோ இதற்கு முன்னரும் ஏவுதலை தள்ளி வைத்தது என்பதால் இது சகஜமான ஒன்றே என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (டிச.,30) இரவு 10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
தற்போது ஏவப்பட்ட ராக்கெட் , ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்று வட்டப்பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.
வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கவும், விண்வெளிக்கு வீரர்களை அனுப்பவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.