இந்தியா

VIDEO: அவன் எனக்கு தான்... ஒரு மாணவனுக்காக சாலையில் சண்டை போட்ட மாணவிகள்

Published On 2025-01-02 09:09 GMT   |   Update On 2025-01-02 09:09 GMT
  • மாணவிகளின் சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
  • போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பெண்ணுக்காக 2 பேர் சண்டை போட்ட சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால் உத்தரபிரதேசத்தில் ஒரு மாணவனை விரும்பிய 2 மாணவிகள் சாலையில் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அங்குள்ள சிங்வாலி போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட அமிநகர் சராய் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அதே பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் விரும்புவதாகவும், இருவரும் மாணவனுடன் அடிக்கடி பேசி, பழகுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பவத்தன்று அந்த மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவிகள் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கி சண்டை போட்டுள்ளனர்.

அதோடு ஒருவரை ஒருவர் காலால் உதைப்பது, கைகளால் மாறி மாறி குத்துவது என சண்டை அதிகமானதை பார்த்த சக மாணவிகளும், அவ்வழியாக சென்றவர்களும் மாணவிகளின் சண்டையை நிறுத்தினர். இதற்கிடையே மாணவிகளின் சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News