இந்தியா
கெஜ்ரிவாலை கலாய்த்த பாஜக.. 'தி கோட்' பட வீடியோவை பகிர்ந்து ஆம் ஆத்மி பதிலடி
- ஸ்கேம் 1992 படத்தின் போஸ்டரை பகிர்ந்து கெஜ்ரிவாலை பாஜக கிண்டல் செய்துள்ளது.
- 'தி கோட்' பட விஜய் கெட்டப்பில் கெஜ்ரிவால் இருக்கும் விடியோவை ஆம் ஆத்மி பகிர்ந்துள்ளது.
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சிக்கு ஆம் ஆத்மி - பாஜக இடையே குடுமிப் பிடி சண்டை நிலவி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பங்கு சந்தையில் மோசடி செய்து கைதான ஹர்ஷத் மேத்தா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தி ஸ்கேம் 1992 படத்தின் போஸ்டரில் ஹர்ஷத் மேத்தா படத்திற்கு பதிலாக கெஜ்ரிவால் படத்தை எடிட் செய்து பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், "டெல்லியில் கெஜ்ரிவாலின் புதிய ஆட்டம். போலி வாக்குறுதிகள் மூலம் ஆட்சியை காப்பாற்ற முயற்சிக்கிறார்" என்று பாஜக கட்சி பதிவிட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் 'தி கோட்' பட விஜய் கெட்டப்பில் கெஜ்ரிவால் இருக்கும் விடியோவை பகிர்ந்துள்ளது.