இந்தியா
உலக செஸ் சாம்பியன் குகேஷ் உள்பட 4 பேருக்கு 'கேல் ரத்னா' விருது அறிவிப்பு
- மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- துப்பாக்கிச்சூடு வீராங்கனை மனு பாக்கருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பாரா தடகள வீரர் பிரவீன்குமாருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு வீரர்களுக்கு வரும் 17ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.