செய்திகள்

மின்கோளாறு காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிப்பு

Published On 2018-01-06 14:31 GMT   |   Update On 2018-01-06 14:31 GMT
மின்கோளாறு காரணமாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையிலான மின்சார ரெயில் சேவை பாதிப்பு அடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
சென்னை:

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கிடைக்கும் பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். பேருந்து போக்குவரத்து முடங்கி போனதால், பொதுமக்கல் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வதால் இன்று நடைபெறுவதாக பராமரிப்பு பணிகளை தெற்கு ரெயில்வே இன்று ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்துக்கு இடையே இன்று மாலை திடீரென மின்கோளாறு ஏற்பட்டது. இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே மெதுவாக சென்றன. பல ரெயில்களுக்கு சிக்னல்கள் கிடைக்காததால் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். 

பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், மின்சார ரெயில்கள் கைகொடுத்தது என்ற நிலையில், மின்கோளாறு காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. #tamilnews

Similar News