செய்திகள்

பெட்ரோல் பாங்கிற்கு உரிமம் அளிக்க லஞ்சம் - பெட்டோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அதிகாரி கைது

Published On 2018-04-07 11:39 GMT   |   Update On 2018-04-07 11:39 GMT
பெட்ரோல் பாங்க் அமைப்பதற்கு உரிமம் அளிக்க லஞ்சம் வாங்கியதாக பெட்டோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அதிகாரி அசோக் குமார் யாதவ் இன்று கைது செய்யப்பட்டார்.
சென்னை:

பெட்ரோல் பாங்க் அமைப்பதற்கு உரிமம் அளிக்க 30 லட்சம் ரூபாய் லட்சம் கேட்டதாக பெட்டோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அதிகாரி அசோக் குமார் யாதவ் மீது புகார் அளிக்கப்பட்டது, இதையடுத்து, சென்னையில் வைத்து அசோக் குமார் யாதவ் இன்று கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சக்தி வேல் என்பவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல் பாங்க் அமைப்பதற்கு உரிமம் அளிக்க லஞ்சம் கேட்ட புகாரில் 11 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகரிலும் சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

Similar News