செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

கஜா புயலில் பாதித்தவர்களுக்கு 28,671 அடுக்குமாடி வீடுகள் - ஓ.பன்னீர்செல்வம் தகவல்

Published On 2019-07-04 13:09 IST   |   Update On 2019-07-04 13:09:00 IST
கஜா புயலில் பாதிக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, 28,671 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கஜா புயலில் பாதித்த மக்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று மதிவாணன் (தி.மு.க.) பேசினார்.

தென்னை மர பாதிப்புகளுக்கும் நிவாரணம் வேண்டும் என்றார். இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்து கூறியதாவது:-



கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த மாவட்டங்களில் நகர பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் மூலமாக மொத்தம் 28 ஆயிரத்து 671 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் ரூ.1742.22 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 458 தனி வீடுகளும், 5 ஆயிரத்து 308 அடுக்குமாடி குடியிருப்புகளும் ரூ.776.04 கோடி மதிப்பீட்டில் 12 நகரங்களில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News