செய்திகள்
திண்டுக்கல் அருகே தி.மு.க. காலண்டர்களுடன் லாரி பறிமுதல்
திண்டுக்கல் அருகே தி.மு.க. காலண்டர்களுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கண்டித்து திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு விநியோகிக்க தி.மு.க. வாசகங்களுடன் அச்சடித்த காலண்டர்கள் கொண்டு செல்வதாக செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து செம்பட்டி ரவுண்டானா அருகில் வாகன சோதனையில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது சிவகாசியில் இருந்து காலண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரியை பிடித்து ஆத்தூர் யூனியன் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சீதாராமனிடம் ஒப்படைத்தார்.
சீதாராமன் லாரி பிடிபட்ட இடம் நிலக்கோட்டை தாலுகா எல்லை என்பதால் நிலக்கோட்டை யூனியன் அலுவலத்தில்தான் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி தனது அலுவலக அறையை பூட்டிவிட்டு சென்று விட்டார். லாரியை மீட்க தி.மு.க. வினர் இன்ஸ்பெக்டரிடம் பேசியும் ஏற்க மறுத்த அவர் லாரியை நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தார்.
ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் லாரியை வெளியே விட மறுத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. வக்கீல்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் ஆத்தூர் யூனியன் அலுவலகத்தில் கூடியதாலும் லாரியை வெளியே விடாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடபோவதாக தி.மு.க., வினர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.