செய்திகள்
மஞ்சளாறு அணை

மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து இல்லாததால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தாமதம்?

Published On 2020-10-09 09:18 GMT   |   Update On 2020-10-09 09:18 GMT
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் இந்த வருடம் குறைந்து உள்ளதாலும், நீர்வரத்து இல்லாததாலும் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். இந்த அணையின் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் இல்லாமல் உள்ளது. அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருக்கிறது.

மஞ்சளாறு அணையில் இருந்து வழக்கமாக அக்டோபர் மாதம் 15-ந்தேதி முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30-ந்தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நவம்பர் 2-ந்தேதி பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.

ஆனால் இந்த வருடம் அணையின் நீர்மட்டம் குறைந்து உள்ளதாலும், நீர்வரத்து இல்லாததாலும் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Similar News