செய்திகள்
வாகன சோதனை

இலுப்பூர் அருகே ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.75 ஆயிரம் பறிமுதல்

Published On 2021-03-20 10:22 GMT   |   Update On 2021-03-20 10:22 GMT
இலுப்பூர் அருகே உள்ள திருநாடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அன்னவாசல்:

இலுப்பூர் அருகே உள்ள திருநாடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், புதுக்கோட்டையை சேர்ந்த அசரப்அலி என்பவர் ரூ.75 ஆயிரம் பணம் எடு்த்து வந்துள்ளார். ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Similar News