செய்திகள்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பயனாளிஒருவருக்கு வழங்கிய போது எடுத்த படம்

அருப்புக்கோட்டையில் கொரோனா நிவாரண நிதி உதவி - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

Published On 2021-05-16 05:35 IST   |   Update On 2021-05-16 05:35:00 IST
அருப்புக்கோட்டையில் கொரோனா நிவாரண நிதி உதவியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
அருப்புக்கோட்டை:

முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி அருப்புக்கோட்டையில் நேரு மைதானம், திருநகரம் மற்றும் பாலவநத்தம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிவாரண நிதி உதவிகளை வழங்கினார்.

பயனாளிகள் முக கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும் நிவாரண நிதியை பெற்று சென்றனர்.

இதில் கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், தாசில்தார் ரவிச்சந்திரன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவபிரகாசம், தி.மு.க. நகரசெயலாளர் ஏ.கே. மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல ஆலங்குளத்தில் வெம்பக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் சசிகலா தலைமையில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆலங்குளம் வருவாய் அலுவலர் பொன்மாரியப்பன் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை ரேஷன் கடை விற்பனையாளர் பொன்ராஜ் செய்து இருந்தார்.

சாத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நேற்று மட்டும் 11 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக சாத்தூர் வட்டார வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் கூறினார்.

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற்ற கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியாண்டி, நகர செயலாளர் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News