உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சேலம்-தருமபுரி இடையே ரூ.250 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் நிறைவுப்பெற்ற பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பழனி கோயிலில் சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதான கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டப பணிகள் ஆகியவை நிறைவடைந்தன.
மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்கள் 18 பேருக்கு குடும்ப பராமரிப்பு உதவித்தொகை ரூ.25,000-க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதன்பின் தருமபுரி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் ரூ.56.20 கோடியில் திட்டப்பணிகள் முடிவுற்றுள்ளது. தருமபுரியில் புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை, புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
சேலம் - தருமபுரி இடையே ரூ.250 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும். எனது வாழ்நாளில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். ரூ.4,500 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
தருமபுரியில் முதன்முதலாக மகளிர் சுய உதவிக் குழுவை தொடங்கி வைத்தது முன்னாள் முதல்வர் கலைஞர் தான்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.