உள்ளூர் செய்திகள்
வேளாண் கல்லூரி மாணவிகள் சொட்டு நீர்பாசனம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்த போது எடுத்த படம்.

சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் பயிற்சி

Published On 2022-02-27 06:44 GMT   |   Update On 2022-02-27 06:44 GMT
மரவள்ளிகிழங்கு பயிர் சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் பயிற்சி அளித்தனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் தொட்டியம் காட்டுப்புத்தூர்  அருகே பிடாரமங்களத்தில், புதுக்கோட்டை மதர்தெரசா வேளாண்மை கல்லூரி இளங்கலை வேளாண்மை பட்டபடிப்பு பயிலும் இறுதி ஆண்டு மாணவிகள்  

தொட்டியம்  சீலைப் பிள்ளையார் புத்தூர் கிராமத்தில் தங்கி தங்களின் கிராமப்புற பட்டறிவிற்காக  வேளாண்மை உழவர் துறையினர் நடத்தும் உழவர் பயிற்சிகள் பண்ணை பள்ளிகளில் பங்கு பெறுவது வழக்கம். 

அதனடிப்படையில் பிடாரமங்களம் கிராமத்தில் வேளாண்மைத்துறை மற்றும் சிறுகமணி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய மரவள்ளி துல்லிய பண்ணை என்ற தலைப்பில் நடைபெற்ற 

பண்ணை பள்ளியில்  மாணவிகளான ஜெயலட்சுமி, காஞ்சனா தேவி, காவியா, செ.காவியா, கவிதா, கவியரசி, கீர்த்தி, கிருஷ்ணவேணி, லாவண்யா, லெபனா,லீனா ஆகியோர் சொட்டுநீர் பாசனம் என்பதை தொழில் நுட்பங்களின்  செயல்பாடுகளை பற்றி விவசாயிகளிடம் விளக்கி கூறினர்.

Similar News