உள்ளூர் செய்திகள்
மகளிர் தினத்தில் துப்புரவு பெண் தொழிலாளர்களை கவுரவித்த கல்லூரி மாணவர்கள்
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து, புடவைகளையும் வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்கள்.
சென்னை:
மகளிர் தினத்தை சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வித்தியாசமாக கொண்டாடினார்கள்.
நேரில் பார்க்கும் பெண்களுக்கு வாழ்த்து சொல்வதோடு விட்டு விடாமல் உண்மையாகவே சேவை செய்யும் பெண்களை கவுரவிக்க முடிவெடுத்தார்கள்.
அதன்படி ராயப்பேட்டை பகுதியில் 15 தெருக்களில் தூய்மை பணியை மேற்கொண்டு வரும் 30 பெண் துப்புரவு பணியாளர்களை கவுரவிக்க திட்டமிட்டனர்.
அவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் புடவைகள் வழங்கினார்கள். மாணவர்கள் தங்கள் சொந்த காசில் மலர் மாலைகள் வாங்கி வந்தனர்.
இன்று காலை 10 மணியளவில் 30 பேரையும் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து, புடவைகளையும் வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்கள். மாணவர்களின் செயலால் பெண் தொழிலாளர்கள் மகிழ்ந்து நன்றி கூறினார்கள்.
பேராசிரியர் சுலைமான் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினார்கள்.