உள்ளூர் செய்திகள்
பணிநியமன ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்

போலீஸ், தீயணைப்பு துறையில் பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2022-03-08 13:45 IST   |   Update On 2022-03-08 16:39:00 IST
119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் தேர்வாகியுள்ளவர்களில் 12 பெண் சிறைக்காவலர்களும் அடங்குவர்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 9,831 இரண்டாம் நிலை காவலர்கள், 1,200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த 9,831 இரண்டாம் நிலை காவலர்களில், 6,140 நபர்கள் சிறப்பு காவல் படையிலும், 3,691 நபர்கள் ஆயுதப்படையிலும் தேர்வாகியுள்ளனர். இதில் 2,948 பெண் காவலர்கள் மற்றும் 3 திருநங்கைகள் ஆகியோரும் அடங்குவர். மேலும், 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் தேர்வாகியுள்ளவர்களில் 12 பெண் சிறைக்காவலர்களும் அடங்குவர்.

இதையும் படியுங்கள்... மகளிர் தினத்தில் துப்புரவு பெண் தொழிலாளர்களை கவுரவித்த கல்லூரி மாணவர்கள்

Similar News