உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பழனி பொள்ளாச்சி இடையே மின்சார ரெயில் பாதையில் ஆய்வு

Published On 2022-03-08 14:10 IST   |   Update On 2022-03-08 14:10:00 IST
பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை மின் வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பழனி:

பழனி பொள்ளாச்சி வழித்தடத்தில் நிறைவு பெற்ற மின்சார ரெயில் பாதை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பழனி, பொள்ளாச்சி ரெயில் வழித்தடத்தில் மின்சார ரெயில் செல்லும் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இப்பாதையில் மின்சார ரெயிலை இயக்கிய தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 8 பெட்டிகளுடன் கூடிய என்ஜினை இயக்கினர்.

ரெயில் பாதையில் உள்ள பாலங்கள், ரெயில்வே கிராசிங், ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் நிலைத்தன்மை குறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.

பணிபுரியும் ஊழியர்கள், மின்வழிப்பாதையின் செயல் திறமைகள் கண்டறியப்பட்டன. தற்போது ஒரு வழிப்பாதையில் மின் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மின் தடை மற்றும் இதர இடர்பாடுகளை கையாளும் முறைகள் குறித்து சோதனை செய்யப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், மின்சார ரெயில்கள் மூலம் பயண நேரம் குறையும், கூடுதல் ரெயில்கள் இயக்கவும் வாய்ப்புகள் அதிகம். எரிபொருள் செலவும், பயணிகள் சிரமும் குறையும் என்றனர்.

மேலும் பாலக்காட்டில் இருந்து திரும்பி வரும் போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்தனர்.

Similar News