உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பயிற்சி முகாம்
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பயிற்சி முகாம் நடந்தது.
நாகர்கோவில்:
குழந்தைகளின் இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதனை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்.
அதன்படி அகஸ்தீஸ்வரம் வட்டாரத்திற்கான பயிற்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் நடந்தது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டாக்டர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் மாவட்ட கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் துரைராஜ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப்,
நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி, கவுன்சிலர்கள் விஜிலா ஜஸ்டின், றோசிட்டா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் செல்வின் குமார் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.