உள்ளூர் செய்திகள்
.

வரதட்சனை கேட்டு பெண்ணை அடித்து உதைத்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2022-03-08 16:14 IST   |   Update On 2022-03-08 16:14:00 IST
தருமபுரி மாவட்டம், அரூரை அருகே வரதட்சனை கேட்டு பெண்ணை அடித்து உதைத்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்துள்ள குமாரபாளையம் வெப்படை காமராஜ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் விஜயா (வயது27). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் அரூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். 

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கும், கடத்தூர் பழைய போஸ்ட் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 15 பவுன் நகை மற்றும் ஒரு புது பைக்கும் வழங்கப்பட்டது. 

எனது கணவர் பட்டபடிப்பு படித்துள்ளதாக கூறி என்னை திருமணம் செய்தார். ஆனால் திருமணம் முடிந்த பிறகு தான் அவர் பிளஸ்-2 தான் முடித்துள்ளார் என்பது தெரியவந்தது. ஏமாற்றி என்னை திருமணம் செய்து விட்டார். 

மேலும் மளிகை கடை வைக்க வேண்டும் என்பதால் எனது கணவர் உனது வீட்டில் இருந்து ரூ.1 லட்சம் வாங்கி வா என்று கூறியும், வரதட்சனையும் கூடுதலாக வேண்டும் என்று சொல்லியும் அடித்து உதைத்து தாய் வீட்டிற்கு என்னை அனுப்பி விட்டார். தற்போது நான் எனது தந்தை வீட்டில் இருந்து வருகிறேன். இதனால் என்னை அடித்து உதைத்த எனது கணவர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக  அரூர் அனைத்து மகளிர் போலீசார்  வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதாக கணவர் சுரேஷ்குமார், லலிதா (66) மற்றும் ராஜேஸ்குமார், தேவகுமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News