உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் கோட்ட ஜி.எஸ்.டி., இணை கமிஷனர் பதவியேற்பு

Published On 2022-03-08 16:50 IST   |   Update On 2022-03-08 16:50:00 IST
வர்த்தகர் மத்தியில் ஆடிட்டர் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இணை கமிஷனர் தெரிவித்தார்.
திருப்பூர்:

திருப்பூர் கோட்ட சரக்கு மற்றும் ஜி.எஸ்.டி., இணை கமிஷனராக (மாநில வரிகள்) ஆனந்த் மோகன் பதவியேற்றுள்ளார். இவரை அகில இந்திய பட்டய கணக்காளர் சங்க திருப்பூர் கிளை தலைவர் வரதராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

மாதாந்திர ஜி.எஸ்.டி., ரிட்டனை காலதாமதமின்றி தாக்கல் செய்து வட்டி மற்றும் அபராதத்தை தவிர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி., சட்டப்படி தகுதியற்ற கொள்முதலுக்கு ரிட்டன் கேட்டு விண்ணப்பிக்க கூடாது. இதுகுறித்து வர்த்தகர் மத்தியில், ஆடிட்டர் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இணை கமிஷனர் தெரிவித்தார்.

Similar News