உள்ளூர் செய்திகள்
.

சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்

Published On 2022-04-07 12:03 IST   |   Update On 2022-04-07 12:03:00 IST
செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல்,

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியில் சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு விழா, நேற்று கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவையொட்டி வருகிற 25-ந் தேதி காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. 26-ந் தேதி இரவு 7 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது. 

தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடக்கிறது. 27-ந் தேதி இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 28-ந் தேதி மாலை 6 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 

29-ந் தேதி காலை 8 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், நண்பகல் 1 மணிக்கு, காட்டேரி வேடம் அணிந்து வருதல், மாலை 4 மணிக்கு வண்டி வேடிக்கை, புராணக்காட்சி ஊர்வலம், கரகாட்டம் உள்ளிட்டவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Similar News