உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் அருகே மருந்து கழிவுகளை வெளியே கொட்டிய கடைக்கு அபராதம்
நாகர்கோவில் அருகே மருந்து கழிவுகளை வெளியே கொட்டிய கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே தம்பத்து கோணம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் மருந்து கழிவுகளை வெளியே கொட்டி இருப்பதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் இன்று அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சாலையில் மருந்து கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.