உள்ளூர் செய்திகள்
மாமூல் தகராறில் பெண் வியாபாரியை தாக்கிய அ.தி.மு.க. பெண் பிரமுகர் கைது
மாமூல் கேட்டு கொடுக்காததால் வளையல் கடை பெண் வியாபாரியை அ.தி.மு.க. பெண் பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா. இவரது கடைக்கு அ.தி.மு.க.வின் மகளிர் அணி நகர இணை செயலளர் திலகவதி வந்தார். அப்போது அவர் மாமூல் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் சித்ரா பணம் கொடுக்க மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பெண்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சித்ரா சிவகாஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் திலகவதியை கைது செய்தனர். மாமூல் கேட்டு கொடுக்காததால் வளையல் கடை பெண் வியாபாரியை அ.தி.மு.க. பெண் பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.