உள்ளூர் செய்திகள்
பீரோ உடைக்கப்பட்டு கிடக்கும் காட்சி.

கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை

Published On 2022-04-07 15:29 IST   |   Update On 2022-04-07 15:29:00 IST
கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கயத்தாறு:

கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுவேல் (வயது31). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

வீட்டில் அவரது மனைவி சத்யா மட்டும் தனியாக வசித்து வருகிறார். தனியாக இருப்பதால் இரவு தனது அக்காள் வீட்டுக்கு தூங்குவதற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் மர்ம நபர் நேற்று நள்ளிரவில் வீட்டில் காம்பவுண்ட் சுவற்றை ஏறி குதித்து, பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 பவுன் நெக்லஸ், 2 பவுன் டாலர் செயின், கம்மல் உள்பட 6 பவுன் நகையை திருடி சென்றுள்ளார்.

இன்று அதிகாலையில் வீட்டிற்கு சத்யா சென்ற போது அங்கு பூட்டியிருந்த கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து, சப்&இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலிப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News