உள்ளூர் செய்திகள்
சீறிவந்த காளையின் திமிலை பிடித்து அடக்கும் வீரர்.

கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

Published On 2022-04-07 15:48 IST   |   Update On 2022-04-07 15:48:00 IST
உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பி-நாயக்கன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும்  ஜல்லிக்கட்டுபோட்டி நடத்துவது வழக்கம். 

இந்த ஆண்டும் கோவில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. உசிலம்பட்டி கோட்டாச்சியர் சங்கரலிங்கம், விலங்குகள் நலத்துறை அதிகாரி மிட்டல், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் உள்ளிட்டோர் உறுதிமொழி வாசித்து கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் களம் இறக்கப்-பட்டன. அவற்றை பிடிக்க வீரர்கள் ஆர்வம் காட்டினர். சுமார் 350 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போட்-டியை கண்டு ரசித்தனர்.

Similar News