உள்ளூர் செய்திகள்
வைகோ

ம.தி.மு.க.வில் 3 மாவட்ட செயலாளர்கள் தற்காலிக நீக்கம்- தலைமைக் கழகம் அறிவிப்பு

Published On 2022-04-29 05:48 GMT   |   Update On 2022-04-29 05:48 GMT
ம.தி.மு.க.வில் இருந்து சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களை தற்காலிகமாக நீக்கி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை:

ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ம.தி.மு.க. கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News