உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கைதானவர்களை படத்தில் காணலாம்.

ஆழ்வார்குறிச்சியில் காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது- 1 டன் அரிசி பறிமுதல்

Published On 2023-08-13 08:42 GMT   |   Update On 2023-08-13 08:42 GMT
  • பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
  • பிடிபட்ட 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 22 மூட்டைகளில் தலா 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து பிடிபட்ட 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காருடன் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடையம் செக்கடியூர் கீழத்தெருவை சேர்ந்த கனகராஜ்(வயது 29), கீழக்கடையத்தை சேர்ந்த நவநீதன்(41), சதீஷ்குமார்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News