உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தை மர்ம சாவு
- தனது தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.
- சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள தொட்லாம்பட்டியை சேர்ந்தவர் குமார்.
இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
குமாரின் மனைவி குமாரசாமிபேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தைக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொன்று சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இறந்தது பெண் குழந்தை என்பதால் இந்த திடீர் மரணம் குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.