உள்ளூர் செய்திகள்

இளம்பெண்களை உல்லாசத்துக்கு ஏற்பாடு செய்யக்கோரி மனைவியை தாக்கிய மாநகராட்சி ஊழியர்

Published On 2023-06-23 13:10 IST   |   Update On 2023-06-23 13:10:00 IST
  • திருமலை தனது மனைவி மற்றும் மகனை சரமாரியாக கட்டையால் தாக்கினார்.
  • மனைவி மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

திருவொற்றியூர்:

மணலியை சேர்ந்தவர் திருமலை (45). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமலையின் மனைவி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருமலை தனது மனைவியிடம் அவரது டெய்லர் கடைக்கு அடிக்கடி வரும் இளம்பெண்களை தனது உல்லாசத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இதே போல் கேட்டு திருமலை மனைவியிடம் ரகளைசெய்து அடித்து துன்புறுத்தினார்.

இதனை வீட்டில் இருந்த அவரது மூத்த மகன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை தனது மனைவி மற்றும் மகனை சரமாரியாக கட்டையால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.

இது குறித்து திருமலையின் மனைவி மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.

Tags:    

Similar News