உள்ளூர் செய்திகள்
மணல்மேட்டில், விழிப்புணர்வு கூட்டம்
- வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும்.
- கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே ராதாநல்லூரில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஆலய மற்றும் அர்ச்சகர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் தொடர்ந்து வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும், சுக்கிரன், சூரியன், சந்திரன் ஆகிய 3 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.