உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே விபத்து: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Published On 2022-10-16 15:10 IST   |   Update On 2022-10-16 15:10:00 IST
  • சங்கராபுரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
  • டிராக்டரின் சக்கரம் அரிகிருஷ்ணன் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு போலீஸ்சரகம் ரங்கப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மகன் அரிகிருஷ்ணன் (வயது 27). இவர் இன்று காலை சீர்பனந்தல் கிராமத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

திருவரங்கம் சாலை வளைவில் திரும்பியபோது எதிரே கரும்புலோடு ஏற்றிய டிராக்டர் வந்தது. இதன் மீது மோதாமல் இருக்க அரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்தார். அந்த நேரம் டிராக்டரின் சக்கரம் அரிகிருஷ்ணன் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இதுகுறித்து பகண்டை கூட்டு ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அரிகி ருஷ்ணன் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News