சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
- மாடு முட்டி சிறுமி காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் சார்பில் வழக்குபதிவு செய்து அபராதம் வசூல் செய்யப்படும்.
சீர்காழி:
சீர்காழி நக ர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிப்பதாவது:-
சென்னையில் மாடு முட்டி பள்ளி சிறுமி காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவம் நடைபெறாது இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
சீர்காழி நகரில் இது போன்று பொதுமக்கள், போக்குவரத்திற்கும், வாகனஓட்டிகளுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றிதிரிகிறது.
கால்நடை உரிமையாளர்கள் தங்க ளது கால்நடைகளை தொழுவத்தில் கட்டி பராமரிக்கவேண்டும்.
மாறாக மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால், சீர்காழி நகராட்சி சார்பில் காவல்துறை உதவியோடு கால்நடைகளை பிடித்து மயிலாடுதுறை கோசாலையில் விடப்படும்.
மேலும் கால்நடை உரிமையாளர் மீது காவல்துறை சார்பில் வழக்குபதிவு செய்து அபரா தம் வசூல் செய்ய ப்படும்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.