போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவர்கள்
- மாணவர்களை ஊக்குவித்தால் அவர்களின் பல்வேறு திறன்கள் வளர்க்கப்படும்.
- முன்னாள் மாணவர்கள் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த முன்வர வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை ப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவில் மாணவ- மாணவிகளின் தனித்திறன் போட்டிகளான கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பரிசுகள் வழங்கினர்.
அப்பொழுது முன்னாள் மாணவர்கள் கூறுகையில்:-
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு அப்பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்கள் இணைந்து இதுபோல் தற்போதைய மாணவர்களை ஊக்குவித்தால் மாணவர்களின் பல்வேறு திறன்கள் வளர்க்கப்படும்.
மேலும், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த அரசு பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தவும், பரிசு வழங்குவதற்கும் முன்வர வேண்டும் என்றனர். முன்னாள் மாணவர்களின் இந்த செயலை ஆசிரியர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் பாராட்டினர்.