உள்ளூர் செய்திகள்

திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்.

திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

Published On 2023-07-23 10:02 IST   |   Update On 2023-07-23 10:02:00 IST
  • விஷ்வசேனர் ஆராதனை, வாசு தேவர் புண்ணியவாகனம், காப்பு கட்டுதல், யக்யோவகி தாரணம் நடைபெற்றது.
  • பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் வருடந்தோறும் ஆடிப்பூரம் திருவிழா சிறப்பாக கொ ண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்தாண்டு ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள், சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நேற்று மாலை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய ப்பட்டன. விஷ்வசேனர் ஆராதனை, வாசு தேவர் புண்ணியவாகனம், காப்பு கட்டுதல், யக்யோவகி தாரணம் நடைபெற்றது. தொடர்ந்து மகாலெட்சுமி பூஜை, மாங்கல்ய பூஜை நடைபெற்று திருமாங்கல்யம் சூட்டும் வைபவம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் செய்திருந்தார்.

Tags:    

Similar News