தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்- யார் அந்த சார்? அ.தி.மு.க சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

Published On 2024-12-29 06:56 GMT   |   Update On 2024-12-29 06:57 GMT
  • பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன.
  • ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோபி:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது.

எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மட்டும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்டம், தகவல் தொழில்நுட்பம் பிரிவு சார்பில் பரபரப்பான போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிரு ந்தன.

அந்த போஸ்டரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற வாசகம் கேள்விக்குறியுடன் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் சேவ் அவர் டக்டர்ஸ் (நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்) என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிச்சாமி படமும் அந்த போஸ்டரில் ஒட்டப்பட்டி ருந்தது.

இதைப்போல் கவுந்தப்பாடி, பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News