தமிழ்நாடு

2024-ல் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் குறித்த வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

Published On 2024-12-31 16:15 GMT   |   Update On 2024-12-31 16:15 GMT
  • வரலாறு படைக்கும் திராவிட மாடல் அரசு எனும் தலைப்பில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
  • இந்த வீடியோவில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் பல நிகழ்வுகள் உள்ளன.

2024 ஆம் ஆண்டில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் அடங்கிய வீடியோ தொகுப்பை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

வரலாறு படைக்கும் திராவிட மாடல் அரசு எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், மகளிர் உரிமைத்தொகை திட்டம், சமத்துவ பொங்கல் விழா, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், மக்களை தேடி மருத்துவம், காலை உணவுத்திட்டம், கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா உள்ளிட்ட திமுக அரசின் பல நிகழ்வுகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News