தமிழ்நாடு
பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
- முக்கிய ஆவணங்கனை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் துரைமுருகன் வீடு, அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்
இந்நிலையில், வேலூர் மாவட்டம் பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இதில், முக்கிய ஆவணங்கனை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திமுக எம்பி கதிர் ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.