திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம்- சிபிஎம் புதிய மாநில செயலாளர் சண்முகம்
- சிபிஐஎம் புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு.
- வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம் என்று சிபிஎம் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பதில் அவர் மேலும் கூறியதாவது:-
மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம்.
போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளவை, எந்த அரசும் அதை நிறுத்த முடியாது. திமுக வெளிச்சத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று முரசொலியில் சொல்வது பொருத்தமானதல்ல.
வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது. அரசுத்துறையில் நிரந்தர பணி இருக்காது என்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.