தமிழ்நாடு

இன்றைய சட்டசபை கூட்டத்துக்கு வராத எடப்பாடி பழனிசாமி

Published On 2025-01-07 11:10 IST   |   Update On 2025-01-07 11:10:00 IST
  • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
  • நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கிய போது அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது சட்டையில் "யார் அந்த சார்?" என்ற பேட்ஜ் அணிந்து இருந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ந்தேதி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் தவிர மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் "யார் அந்த சார்" பேட்ஜை அணிந்து இருந்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் நடந்த போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். இதுபற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அதை நாட்டு மக்களுக்கு சுட்டிகாட்டவே நாங்கள் இந்த பேட்ஜ் அணிந்து வருகிறோம்" என்றனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற தமிழக சட்டசபையின் 2-வது நாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும், அதன் காரணமாகவே அவர் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News