நாவை அடக்குங்கள், நடத்தையை சரி செய்து கொள்ளுங்கள்- ஆளுநருக்கு கனிமொழி அட்வைஸ்
- நாட்டின் அரசியலமைப்பை, நாட்டு மக்களை காப்பாற்றும் எங்களுக்கு பாடம் கற்றுத்தரும் நிலையில் நீங்கள் இல்லை.
- ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது எம்.பி. கனிமொழி கூறியதாவது:
* சட்டசபையில் உரையாற்றாமல் சென்றதை குழந்தை போல் காரணம் சொல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
* தமிழக சட்டசபையில் 3-வது முறையாக உரையாற்றாமல் ஹாட் ட்ரிக் அடித்துள்ளார் ஆளுநர்.
* வீட்டிலிருந்து விடுமுறை கடிதம் எழுதுங்கள். அதை முதல்வர் அனுமதிப்பார்.
* உங்களுக்கும் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்.
* நாட்டின் அரசியலமைப்பை, நாட்டு மக்களை காப்பாற்றும் எங்களுக்கு பாடம் கற்றுத்தரும் நிலையில் நீங்கள் இல்லை.
* தமிழகத்தில் ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்தால் பா.ஜ.க.வின் ஓட்டு சதவீதம் கண்டிப்பாக சரியும்.
* கடைசியில் தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு ஓட்டு கூட வாங்க முடியாத நிலை வரும் என்பதால் தான் ஆளுநரை திரும்ப பெற கூறுகிறோம்.
* தமிழ்நாட்டிற்கு நீங்கள் வேண்டாம் என உங்களின் நலனுக்காகவே சொல்கிறோம்.
* ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை.
* நாவை அடக்குங்கள், உங்கள் நடத்தையை சரி செய்து கொள்ளுங்கள்.
* தமிழகத்தை மதிக்காவிடில் ஓடஓட விரட்டப்படுவீர்கள். அந்த நாள் வெகுவிரைவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.