மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக சண்முகம் தேர்வு
- மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
- கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியனது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலக கே.பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.