4வது முறையாக ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டாஸ்
- சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின் பேரில் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் ஞானசேகரன் மீது உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைக் குழு அதிகாரிகள் இன்று காலை ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் ஞானசேகரன் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின் பேரில் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஞானசேகரன் மீது ஏற்கனவே 3 முறை குண்டாஸ் போடப்பட்ட நிலையில், 4வது முறையாக ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் ஞானசேகரன் மீது உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.