தமிழ்நாட்டின் கனவுகளை மதித்தவர் மன்மோகன் சிங்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
- மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் என 2 பெரிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்துள்ளோம்.
- 10 ஆண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் 21 தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
சென்னை:
சென்னை காமராஜர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் திருவுருவ படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின்னர் அவர் பேசியதாவது:-
* நெருக்கடியான காலத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பிடித்தார் மன்மோகன் சிங். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
* தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
* மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் என 2 பெரிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்துள்ளோம். இருவரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் இழப்பு தான்.
* 10 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பில் இருந்து ஆட்சியை நடத்தி காட்டியவர் மன்மோகன்சிங்.
* 10 ஆண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் 21 தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தனர். மிக மிக முக்கியமான அமைச்சரவை பொறுப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.
* 2004-ல் பிரதமர் நாற்காலி தேடிவந்து சேர்ந்த போதும் அதை மறுத்து மன்மோகன் சிங்குக்கு அளித்தவர் சோனியாகாந்தி.
* வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மன்மோகன் சிங் 2 முறை பிரதமரானார்.
* 100 நாள் வேலை, உணவு பாதுகாப்பு சட்டம், லோக்பால் சட்டங்களை மன்மோகன் சிங் கொண்டுவந்தார். சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை கொண்டுவந்தார்.
* தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மையம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மன்மோகன் காலத்தில் கொண்டு வரப்பட்டவை.
* தமிழ்நாட்டின் கனவுகளை மதிக்கக் கூடிய தலைவராக மன்மோகன் சிங் இருந்தார்.
* ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை எப்போது சந்தித்தாலும் உடல்நலம் குறித்து விசாரிப்பார் என்றார்.