தமிழ்நாடு

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கம்

Published On 2025-01-03 12:52 GMT   |   Update On 2025-01-03 12:52 GMT
  • 5ம் தேதி அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
  • மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

சென்னையில் வரும் 5ம் தேதி நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 5.1.2025(ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ ரெயில் சேவைகள், வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.

மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News