சிறுமி உயிரிழப்பு விவகாரம்- பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது
- தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.
- பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றச்சாட்டு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, யுகேஜி வகுப்பு ஆசிரியை ஏஞ்சல், தாளாளர் எமால்டா ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.