சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
- சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தில்லை கங்கா நகர்: தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் பகுதி, பழவந்தாங்கல், ஜீவன்நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வாணுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதி, ஏஜிஎஸ் காலனி (வேளச்சேரி மேற்கு), இபி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் புதிய காலனி.
ஏலியம்பேடு: டவுன் பொன்னேரி, வேலோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு பெரிய காவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி மற்றும் கனகம்பாக்கம்.
எழில் நகர்: மேட்டுக்குப்பம் விபிஜி அவென்யூ, ராயல் அவென்யூ, அன்னை அவென்யூ, நேரு நகர், பாம்பன் பாபா நகர், சந்திரசேகர் நகர், ஸ்ரீனிவாசா நகர், குமரகுரு அவென்யூ.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.