உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வு எழுத சென்ற ஆரணி மாணவியை கடத்தி திருமணம்- தஞ்சாவூர் வாலிபர் போக்சோவில் கைது

Published On 2023-04-03 06:17 GMT   |   Update On 2023-04-03 06:17 GMT
  • மகள் கிடைக்காததால் இது குறித்து அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
  • மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ஆரணி:

தஞ்சாவூர் மாவட்டம் சத்துவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 21), யூடியூப் சேனல் மூலம் செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

செல்வம் பதிவு செய்து வந்த வீடியோக்களை ஆரணி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவி தினமும் பார்த்து பதில் போட்டு வந்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

இதனையடுத்து செல்வம் கடந்த 29-ந் தேதி மாணவியை பார்ப்பதற்காக ஆரணிக்கு வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

தேர்வு எழுத சென்ற மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். மகள் கிடைக்காததால் இது குறித்து அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் மாணவியின் செல்போன் மூலம் துப்புதுலக்கினர். அவர் ஜெயங்கொண்டம் அருகே இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஜெயங்கொண்டத்திற்கு விரைந்து சென்று இருவரையும் ஆரணிக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மாணவியை வாலிபர் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது. மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பள்ளி மாணவியை சமரசம் செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News