உள்ளூர் செய்திகள்
கூட்டுறவுத்துறையின் பெட்ரோல் - டீசல் விற்பனை நிலையம்
அரியலூரில்கூட்டுறவுத்துறையின் பெட்ரோல் - டீசல் விற்பனை நிலையம்
அரியலூர்,
அரியலூர் அண்ணாநகர் பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டு உள்ளது. இதனை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் ஆனந்தவேல், டி.எஸ்.பி. சங்கர்கணேஷ், கூட்டுறவு சரக இணைபதிவாளர் தீபாசங்கரி, துணை பதிவாளர் அரப்பலி, மேலாண்மை இயக்குனர் பழனியப்பன், செயலாளர் சுப்பிரமணியன், இந்தியன் ஆயில்கார்ப்பரேசன் அதிகாரிகள் சுர்ஜன், கார்த்திக், ராஜீவ்சரன், ஒன்றியகவுன்சிலர் சரவணன், நகர செயலாளர் அரியலூர் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.