அரியலூரில் 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
- திருச்சி சரகத்திற்குட்பட்ட அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), மணி (பெரம்பலூர்) ஆகியோர் தலைமையில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.
- அரியலூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து, 45 கிலோ 754 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில்,
திருச்சி சரகத்திற்குட்பட்ட அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), மணி (பெரம்பலூர்) ஆகியோர் தலைமையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசாரால் சிறப்பு அதிரடி வேட்டை கடந்த 16-ந்தேதியும், நேற்று முன்தினமும் நடத்தப்பட்டது.
இதில் அரியலூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து, 45 கிலோ 754 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்து 9 கிலோ 919 கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மாவட்டங்களில் சட்டவிரோதமாக புகையிலை வியாபாரம் செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.